மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா தலைமையில் இன்று (31.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர் , கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாள விநாயகன்அமல்ராஜ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், நீர்வளத்துறை செயற் பொறியாளர் சண்முகம், மற்றும்விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.