மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கனஅடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாலும்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.