உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மயிலாடுதுறையில் திமுகவினர் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு ஏற்றதை வரவேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகர திமுக அலுவலகத்தில் இருந்து நகரத் தலைவர் செல்வராஜ் தலைமையில்
திமுகவினர் ஊர்வலமாக பேருந்து நிலையம் சென்று பொது மக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.