மயிலாடுதுறை மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் , திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கும் வகையில் இ-சேவை மையமும் திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் 4 பேருக்கு தையல் இயந்திரங்கள் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.