Skip to content
Home » மாண்டஸ் புயல்… தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகம் சேதம்…

மாண்டஸ் புயல்… தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகம் சேதம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019ம் ஆண்டு அதிமுக அரசால் 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் என்ன 14 அடி உயரம்,6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2020ல் ஆம்பன் புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் கூடுதலாக 70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 190 கோடி மதிப்பீட்டில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதமடைந்தது.

கருங்கற்களால் ஆன 14 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் கான்கிரீட்டிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 10 அடியில் இருந்து 15 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் அளவில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கருங்கற்களால் ஆன தடுப்பு சுவரில் மண் கொண்டு நிரப்பப்பட்டு மேலே கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அலை வேகத்தில் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சமதளத்தில் இருந்த கான்கிரீட் பாதையானது லேசாக உள்வாங்கியுள்ளது. விளிம்பு பகுதிகள் கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ளது தூண்டில் வளைவு துறை முகத்தை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!