மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரை ஓர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை இடியுடன் பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தற்பொழுது பல்வேறு இடங்களில் சாரல் மழையாக இருந்தும் கடலோரப்பகுதியில் மிதமாக மழை பெய்து வருகிறது.
காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மயிலாடுதுறை 20 மி.மீ., மணல்மேடு 4 மி.மீ, சீர்காழி 13.2 மி.மீ, கொள்ளிடம் 10.6 மி.மீ, தரங்கம்பாடி 30 மி.மீ., செம்பனார்கோவில் 6.2 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 14.00மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா தாளடி 1 லட்சத்து 68ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரம் அடித்த பலத்த மழையால் பயிர்களில் பிடித்திருந்த பூச்சிகள் ஓரளவுக்கு ஒழிந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என மாவட்டஆட்சியர் அறிவிப்புக்கு இணங்க-
மயிலாடுதுறை கலைமகள் பள்ளி குழுமம் தனது 18 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.