வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று
காலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செம்பனார்கோயில் தரங்கம்பாடி மங்கைநல்லுர் குத்தாலம் மனல்மேடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மயிலாடுதுறை மாவட்டத்தில்
மயிலாடுதுறை 21.8 மி. மீ.
மணல்மேடு 11 மி. மீ.
சீர்காழி 17.40 மி. மீ.
கொள்ளிடம் 6. மி. மீ.
தரங்கம்பாடி 38.30மி. மீ
செம்பனார்கோவில் 31.40 மி. மீ. மழை பதிவாகியுள்ளது- சாரல் மழை தொடர்கிறது.