மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கடவாசல் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வேளாண்மை இணை இயக்குநர் சேகர், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.