Skip to content

மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,81,543 ஆண் வாக்காளர்கள் 3,93,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 46 இதரர் என மொத்தம் 7,75,458 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!