Skip to content

மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெடி விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் , மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த மதன், கல்லூரி மாணவன் நிகேஸ், ராகவன் ஆகிய நான்கு பேர் உடல் சிதறி பலியாயினர். இதில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் இறப்பதற்கு முன்பே அஞ்சலகம் மூலம் விபத்து காப்பீட்டு திட்டத்தில் 396 ரூபாய் செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தார். இதனால் அவரது மறைவுக்குப் பின் அஞ்சலகம் மூலம் விபத்து காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்திற்கு குடும்பத்தினரை வரவழைத்து மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் மறைந்த மாணிக்கத்தின் மனைவி அபிதாவிடம் வழங்கினார். கண்ணீர் மல்க காசோலையை பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!