மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஶ்ரீகாந்த் நேற்று பொறுப்பேற்ற நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் முதல் ஆய்வு பணிகளை நேற்று துவங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், குடிநீர் வசதிகள், கழிவறை உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், தினசரி புறநோயாளிகள் வருகை பதிவேடுகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அவர் புறநோயாளிகள் பிரிவகத்தில் வருகை தந்த பொதுமக்களிடம் முறையாக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றதா என்பதனை கேட்டறிந்தார். பின்னர், மருந்து இருப்பு மற்றும் மருந்து விவரங்களை சுகாதார துறை இணை இயக்குநர் அவர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாய்வின்போது, சுகாதார துறை இணை இயக்குநர் மரு.மருதவாணன் உடன் இருந்தார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…
- by Authour
