Skip to content

ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவியர் விடுதி, தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், மற்றும் மணக்குடியில் ரூ. 24 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணிகளையும், மன்னம் பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது…  மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை நகரம் என்னும் பணி கடந்த ஒரு மாத காலமாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ,பத்திர பதிவுத்துறை அலுவலகம், அரசினர் மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதி ,போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்காக்கள் நமக்கு நாமே திட்டத்தில் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் நிழல் தரும் மரங்கள் என்று சொல்லக்கூடிய குறுங்காடுகள் மிக விரைவில் அமைக்கப்படும்.  அரசு அலுவலங்களில் மாதம் ஒரு முறை தூய்மை பணி மேற்கொள்ளப்படும். பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள மண்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 99 கோடி செலவில் வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். மாவட்ட முழுவதும் சாலைகளில் சில இடங்களில் குண்டும் குழியுமான இடங்களில் உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!