மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள புனித துலா கட்டத்தில் காலை முதலே நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். காசிக்கு இணையான ஆறு இடங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. எனவே மயிலாடுதுறை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். தர்ப்பணம் கொடுத்தும் காய்கறி கீரைகள் பூசணிக்காய் பச்சரிசி வெல்லம் ஆகியவற்றை தானமாக அளித்தும் வழிபாடு செய்து காவிரி கரையில் உள்ள சிவாலயங்களில் தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் புனித துலா கட்ட புஷ்கர தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி விட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்
