மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது. நேற்று 508 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. சுமார் பதினைந்து அடி உயரத்தில் செயற்கையாக, 18 படிகள் அமைக்கப்பட்டு சுவாமி ஐயப்பனின் பஞ்சலோகத் திருமேனி வைக்கப்பட்டு படிபூஜை நடைபெற்றது முக்கிய நிகழ்ச்சியான மகா அபிஷேகம் இன்று கைலாய வாத்தியங்கள் இசைக்க நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய
மஞ்சளால் ஐய்யப்பன் திருமேனி மஞ்சள் காப்பு செய்யப்பட்டு ஐய்யன் அருளைபெற சுப்ரபாத அபிஷேகம் செய்யப்பட்டது. தொடாந்து திரவியம், அரிசிமாவு, வாழைப்பழம், மாம்பழம், பழாச்சோலை, பஞ்சாமிர்தம், தேன், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய;யப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஐய்யப்பன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.