தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன மடாதிபதி, மேல குரு மூர்த்த ஆலயங்களில் வழிபாடு :-
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில்
16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை பட்டடணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடம்) குரு மூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரிக்கரையில் ஆதீனத்திற்கு
மேற்கு புறத்தில் உள்ள இந்த இடத்திற்கு மேல குரு மூர்த்தம் என்று பெயர். தொடர்ந்து இங்கு பூஜை செய்ய, பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குருமூர்த்தத்திற்கு எழுந்தருளினார். இதனை அடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒவ்வொரு ஆலயத்திலும் அந்தந்த மடாதிபதிகளின் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.