Skip to content
Home » மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக அந்த சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி இல்லாததோடு கருமாதி மண்டபம் இல்லாததால் யாராவது இறந்தால் சாலையோரத்தில் 16ம்நாள் காரியம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது. அதனையடுத்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து கிட்டப்பா பாலம் அருகே கருமாதி மண்டபம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

ஆனால் நகராட்சி இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கருமாதிமண்டபம் கட்டுமான பணி தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. இந்த பணியை மீண்டும் தொடங்க கோரி மாப்படுகை ஊராட்சி மற்றும் நகராட்சி வார்டு பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸா இருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பேரிகாடுகள் இழுத்து தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுமான பணி உடனே தொடங்கும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதனால் வரையில் எந்த பணியும் தொடங்காததால் ஆத்திரமடைந்த மாப்படுகை ஊராட்சி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாப்படுகை ரயில்வே கேட் அருகே கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *