மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு தலைமையில்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்தும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டியும்
அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.