மயிலாடுதுறை மாவட்டம், கோமல் பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் சென்னையில் ஆடிட்டராகப் பணியாற்றி வருபவர், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். வட மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் (சிஎஸ்ஆர்) பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து பலநூறுகோடி ரூபாய்செலவு செய்து புற்றுநோய் சிகிச்சை மையம் உட்பட பல்வேறு சிறந்த சேவை செய்துவருகின்றனர். அதே போன்று தமிழகத்தில் கட்டப்படவில்லை என்பதால் மயிலாடுதுறை பகுதியில் புற்றுநோய் உயர்தர சிகிச்சை மருத்துவமனை கட்டவேண்டும் என்றும் ஏழை எளியவருக்கு இலவசமாக சேவை செய்யவேண்டும் என சந்தானகிருஷ்ணன் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பயனாக தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள்மூலம் புற்றுநோய் உயர்தர சிகிச்சை மையம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்பதால் பலநூறு கோடி ரூபாய் செலவில் அமைப்பது குறித்த ஏற்பாட்டை செய்துவருகிறார். மயிலாடுதுறை அருகே நீடூர் கல்லூரிக்கு அருகில் 25 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் ஆலோசனை மேற்கொண்டு அரசு ஒத்துழைப்பை வேண்டினார், அவருடன் குத்தாலம் முன்னாள் எம்எல்ஏ கல்யாணம், அரசு வழக்கறிஞர், தலைமை மருத்துவர் உட்பட பலர் கலந்துகொண்டனர். உரிய உதவிகள் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.