மயிலாடு துறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் ரெத்தின சாமி தலைமை வகித்தார்.
முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசும் போது, இந்த தேர்தல் மிக மிக முக்கியமானத் தேர்தல், 2026 ல் பழனிச் சாமி முதல்வராக உட்கார வைப்பதற்கான முன்னோடித் தேர்தல். பாபுவை வேட்பாளராக நிறுத்தியது பழனி சாமி. காங்கிரசின் வேட்பாளரை இன்னும் காணவில்லை. 27 ந் தேதிக்கு பிறகு சொல்வார்கள் என்று நினைக்கிறேன். பா.ம.க இல்லாதது நல்லது. பாபநாசம் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் தொகுதியாக இருக்க வேண்டும்’ என்றார்.
இதில் முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:எடப் பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்ணுல ஒத்திக்கலாம். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தவர் என்றார்.
எம்.பி வேட்பாளர் பாபு பேசும் போது தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வருவேன். விமான நிலையம் அமைத்து தருவேன். மேம்பாலம் அமைப்பேன்.
நெசவுத் தொழிற் சாலை, மருத்துவக் கல்லூரி, கும்பகோணம் தனி மாவட்டம் அமைய உரிய நடவடிக்கை மேற்க் கொள்வேன் என்றார்.
மயிலாடு துறை மாவட்டச் செயலர் பவுன்ராஜ், முன்னாள் எம்.பி பாரதி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ ராம் குமார், அம்மாப் பேரவை மாவட்டச் செயலர் சண்முக பிரபு, ஒன்றியச் செயலர்கள் பழனி சாமி, கோபிநாதன், ராமச் சந்திரன், பேச்சாளர் நாகையன், பேரூர் செயலர்கள் சின்னையன், கோவிந்த சாமி, காமராஜ், சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் உட்பட ஒன்றிய, பேரூர், கிளை, சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றியச் செயலர் சூரிய நாராயணன் நன்றி கூறினார்.