மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரையும் கண்டுபிடிக்க முடியாமல், பைக்கும் கிடைக்காமல், செம்பனார் கோவில் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்ய முடியாமல் திணறிவந்தனர். தொடர்ந்து பல்வேறு சாலைகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு, அந்த வாகனத்தை திருடிய, மயிலாடுதுறை கூறைநாடு, நவீன் குமார் (25) உளுத்தக்குப்பை அசோக் (26),
அருவாபாடி விக்னேஷ்(25) ஆகிய மூன்று நபர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்த, விபத்து வாகனம், கைப்பற்றப்பட்டது. மூவர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் அதன் பிறகு 12ஆம் தேதி நடந்த சாலை விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.