மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சர்க்கஸ் கொட்டகைக்கு சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் சர்க்கஸ் நடத்த முறையாக அனுமதி பெற்ற பின்னர் மீண்டும் நடத்தப்படும் என தெரிய வருகிறது.