மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்.30. வியாபாரி. இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயணி.(25) என்பவருக்கும் கடந்த 3.02.2023 அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த 5ம் தேதி சரவணனை, மனைவி தாட்சாயணி மற்றும் அவரது ஆண் நண்பரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்.38. ஆகிய இருவரும் சேர்ந்து கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சரவணன் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தாட்சாயணி, அவரது ஆண் நண்பர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் தாட்சாயணி, சரவணனை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி ராஜசேகருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து சரவணன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாட்சாயிணி, ராஜசேகரை வரவழத்து இருவரும் சேர்ந்து சரவணன் கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து தாட்சாயிணி, ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய குத்தாலம் போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.