மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் பாண்டி சாரயம், 672 குவாட்டர் மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல். கடத்தி வந்த கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை:-
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து சாராயம் மதுபாட்டில்களை காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி நீலகண்டன் தலைமையில் செம்பனார்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் :ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 672 பாண்டி மதுபாட்டில்கள், 220 லிட்டர் கொண்ட 300 குவாட்டர் பாட்டில் சாராயம் , 11 சாராய மூட்டைகள்’, 230 சாராய பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 லட்சம் மதிப்பிலான காரையும், 1 லட்சம் மதிப்பிலான 672 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் மற்றும்’ மதுபாட்டில்களை கடத்தி வந்த மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவரை கை செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. யாருக்காக கடத்தலில் ஈடுபட்டார் சாராய வியாபாரி யார்’ என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.