டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம்,
இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் ரயிலில் புறப்பட்டு சென்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் 3 அமைப்புகளும் சேர்ந்து விவசாய விலைபொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், 60 வயது பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,. தொழிலாளிகள் போராடி பெற்ற பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டுள்ளததை கண்டித்தும், வேலையின்மைக்கு எதிராகவும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் டில்லியில் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறைறை மாவட்டத்திலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
