இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 10 மத்திய பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்கதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்கதினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர் நீத்த 5 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே மீனா தலைமையில் டிஎஸ்பிக்கள் மற்றும் உயிர் நீத்த காவலர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.