உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காதது, உரத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ50,000 கோடி குறைவான மானியத்தை ஒதுக்கியது, 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட ரூ.30,000 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்தது உள்ளிட்டவற்றை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் பட்ஜெட் நகலை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.