மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் அருகே கொடைவிளாகம் மெயின் ரோட்டில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விசித்திராமேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காரைக்காலிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் கொண்ட 2250 பாண்டி ஐஸ் சாராய பாக்கெட்டுகள், 2500 குவாட்டர்
சாராய பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர் .வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பாவட்டகுடி பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் ரமேஷ்(40) என்பவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் பகுதிக்கு கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார்.