மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி துவங்கியது மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி சீர்காழி ஆகிய தாலுகாக்களில் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் ஆகியது. அதற்கு அரசு தேவையான உர மானியம் மற்றும் பயிர் காப்பீடு வழங்கியது. விவசாம்பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.40 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடை துவங்கி உள்ளது.
குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக அறுவடை பணி நடைபெற்று வருகிறது நவீன அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடைபணி நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இதுவரை 150 இடங்களில் கொள்முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.