மயிலாடுதுறை மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. மாவட்ட கார், வேன், ஆட்டோ, லோடுவேன், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின், மாவட்ட தலைவர் கண்ணன், தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், தமிழக அரசு கடந்த, ஒன்பதாம் தேதி அன்று, அறிவித்துள்ள பழைய வாகனங்களுக்கு, புதிதாக வரித்துள்ள, ஆயுள்கால வரி உயர்வை குறைத்து, அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான அறிவிப்பு செய்ய வேண்டும் , காலாண்டு வரியை இந்தமாதம் 30ஆம் தேதி என்பதையும் மாற்றித்தரவேண்டும், என அக்கோரிக்கை மனுவில் தெரிவித்தனர். மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்து மனு அளித்தனர்.