மயிலாடுதுறை நகரில் சின்னகடைத் தெருவில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டு, யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்
தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதாம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் மகாபிஷேகம் செய்யப்பட்டது இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.