மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து பெருந்தோட்டம் சென்று கொண்டிருந்தது.
மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி
சஞ்சீவ் குமார் ஆகியோர் பேருந்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் நெய்வேலியில் போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல் வீசி தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.