மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, கோமல், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குத்தாலம் தாலுக்கா மற்றும் மணல்மேடு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாண்டஸ் புயல் ஒன்பதாம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்று காலை வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குத்தாலத்தில் கார்த்திகை மாத கடைஞாயிறு தீர்த்தவாரியில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் கனமழையால் அவதி அடைந்தனர்.