மயிலாடுதுறை பகுதிகளில் காலை 6 மணி முதல் சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்குப் பிறகு சம்பா மற்றும் தாளடி விவசாயத்தின் அறுவடை துவங்கி நடைபெற்றுவருகிறது, இந்த நேரத்தில் தற்பொழுது துவங்கியுள்ள
இந்த மழை நீடித்தால் வயலில் சாய்ந்துள்ளது நெல் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு முளைக்கும் நிலைக்கு ஆளாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டதால் நெல் மகசூல் குறைவாக கிடைப்பதாகவும் அதுவும் இந்த மழையால் மேலும் பாதிக்கலாம் என்று அச்சத்தில் உள்ளனர்