கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த புளியங்கண்டி பகுதியில் மயில் ஒன்றை அப்பகுதியில் உள்ள நாய் விரட்டிச் சென்றுள்ளது. இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான சிறுமி தாரணி, நாயிடமிருந்து மயிலை காப்பாற்றி மயிலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி உள்ளார்
பின்னர் தாரணி மயிலை வெளியே அழைத்து சென்று விட முயற்சித்த போது பயம் காரணமாக மயில் பதட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தாரணி தனது தாய் பவுலினா உதவியுடன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை ஊழியர் பதற்றத்தில் இருந்த மயிலை பிடித்து சென்று அடர்ந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர். ஐந்தாம் வகுப்பு மாணவியின் இச்செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.