Skip to content
Home » வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

  • by Senthil

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்து மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வங்காளதேசத்தில் இருந்து விரைவில் 1 கோடி பேர் அகதிகளாக மேற்குவங்காளத்திற்குள் நுழையலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார். வங்காளதேசத்தில் இந்து மதத்தினர் தாக்கப்படுவதாகவும், அகதிகளாக இந்தியாவுக்குள் வருபவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!