சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 22,168 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதில் 20,748 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தென்கரை வாய்க்காலிலும், 300 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 400 கன அடி தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.
