Skip to content
Home » மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

காவிரி ஆறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 17,744 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அதில் 16,324 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தென்கரை வாய்க்காலிலும், 300 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 400 கன அடி தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும், 20 கன அடி தண்ணீர் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு காரணமாக நீர் வெளியேற்றம் குறைந்துள்ளதால் கரூர் மாவட்டம் மாயனூர் கதவனைக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *