Skip to content
Home » நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(அக்.,17) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் நாளை(அக்.,18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் அக்டோபர் 20ம் தேதி கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!