Skip to content
Home » மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

மாமன்னர் ராஜராஜ  சோழன் கட்டிய உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு  இன்று காலை மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகள் கொண்டு மஹா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. காய்கனி, மலர்கள் அலங்காரத்தில் மஹாநந்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கொரோனா காலத்தில் 2 ஆண்டுளாக விமரிசையாக கொண்டாடப்படாத இந்த விழா இன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது.   108 பசுமாடுகளுக்கு கோ-பூஜை  நடந்தது. மேலும் 2 டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்ட மஹா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கிற 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு கன்றுகளுக்கு அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.

வாழைப்பழங்கள் மற்றும் பொங்கல் மாடுகளுக்கு  கொடுக்கப்பட்டன. கோ பூஜை செய்வதால் வேண்டும் வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். கோ-பூஜை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனர்.

கொரோனா பாதிப்பால் ஒரு மாடு மட்டும் வைத்து நடத்தப்பட்ட மாட்டுப் பொங்கல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!