கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
