தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் திருவிடைமருதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சட்ட விரோதமாக புதுச்சேரி சாராய மதுபாட்டில்கள் 1510 கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த கருப்பூரைச் சேர்ந்த கலியபெருமாள் (45), சுமதி (48) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கலியபெருமாள் மீது கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பந்நதநல்லூர் காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து கலியபெருமாள் மற்றும் சுமதி இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி திருவிடைமருதூர் டிஎஸ்பி கீர்த்தி வாசன் வேண்டுகோளின் படி தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலியபெருமாள், சுமதி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தாவிட்டார்.