பெரம்பலூர் அருகே பாடலூர் கிராமத்தில் ஆனந்தகுமார்(50) என்பவர் வசித்து வருகிறார் அவரது வீட்டின் அருகே குடியிருக்கும் சுரேஷ் என்பவருக்கும் குடிநீர் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் இருவருக்கும் வாய் தகார் ஏற்படவே சுரேஷுக்கு ஆதரவாக ஹௌசிக், கீதா, அரவிந்த் குமார் ஆகிய ஒன்று சேர்ந்து ஆனந்த குமாரை கடுமையாக தாக்கியதில் அங்கேயே ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்த சுரேஷ் அப்பகுதியில் தந்துக்கடை நடத்தி வருவதாகவும் அதனை ஆனந்தகுமார் தட்டி கேட்டதாகவும் இதற்கு இடையே நடந்த தகராறு கொலை நடந்ததாக தெரியவருகிறது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
