திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகள் வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு தனியார் பள்ளியில் +2 படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்தநிலையில் இந்த ஆண்டு வர்ஷா தனது வீட்டிலிருந்தபடியே +2 தேர்விற்கு படித்து தனித்தேர்வராக பொதுத்தேர்வு எழுதினார். தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி வர்ஷாவிற்கு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் எலி பேஸ்ட்-ஐ தின்ற நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனையறிந்த வர்ஷாவின் பெற்றோர் உடனடியாக திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி வர்ஷா உயிரிழந்தார்.. இந்த சம்பவம் குறித்து பாலசுப்ரமணியன் முசிறி போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.