தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 ரிசல்ட் வெளியிடப்பட்டதது. தமிழ்நாடு முழுவதும்94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன்படி கணிதத்தில் 2587பேர் சென்டம் பெற்றுள்ளனர். தமிழரில் 35 பேரும் ஆங்கிலத்தில் 7 பேழம், இயற்பியலில் 63 பேரும் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளனர்.
வேதியியலில் 471 பேரும், உயிரியலில் 652 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382பேரும், கணினி அறிவியலில் 6996பேரும், வணிகவியலில் 6142பேரும், கணக்கு பதிவியலில்1647பேரும், பொருளாதாரத்தில் 3299பேரும், கணினிபயன்பாடுகள் பாடத்தில் 2251பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியலில் 210பேரும் 100க்கு 100 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர்.