மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், 13 மாநிலங்களில் இருந்து தேர்வான 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது.
ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதிகளில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ள நிலையில், அந்த பதவிகளுக்கு வரும் 27 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதில் காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தானில் இருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வாக உள்ளார்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் அதே மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மக்களவைத் தொகுதியில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.