Skip to content
Home » மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

மத்திய, மாநில அரசுகள் மீது வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்து வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் உதவியாக வழங்க வரும் நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கும் அவலம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது.

இது மட்டுமல்லாமல் இப்போது 2000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்ற அவர், இதே போல நரேந்திரமோடி 15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். ஆனால் சொன்ன எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை.

இப்படி மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பு.தா.அருள்மொழி வன்னியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக தனி இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செம்மங்குடி துரைமுத்து, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, நிர்வாகிகள் அய்யப்பன், காமராஜ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க, சமூக முன்னேற்ற சங்கத்தைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *