கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது.
கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மாநில இணை செயலாளர் பொறியாளர் தென்னரசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதியம் 12 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் 2024 25 காண பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு கட்டுமான
துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொறியாளர்கள் வாழ்வாதாரம் காத்திட பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.