ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விவசாய அமைப்புகளை சார்ந்தவர்கள் திரண்டனர். அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், டிராக்டர் பேரணியை நடத்தவில்லை என்றும், ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காரணமாக அதிகளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.