கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் தோட்டத்து வீட்டின் மதில் சுவரை சேதப்படுத்தி உள்ளே புகுந்த ஒற்றைக் காட்டு யானை. அங்கு வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்களை தின்று சேதப்படுத்தியது, இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த வனத் துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அங்கு இருந்து வனப் பதிக்குள் விரட்டிச் சென்றனர். மேலும் அப்பகுதியில் உணவு தேடி அடிக்கடி ஒற்றை யானை உலா வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளும் மற்றும் வனத் துறையினரும் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது