முதல் முறையாக மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகம் ஆகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஸ்போர்ட்ஸ் இயக்குனராக துருவ் பஞ்ச்வானி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதை அடுத்து VFX சூப்பர்வைசராக விஜய் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குணால் ராஜன் மற்றும் ராஜா கிருஷ்ணன் ஆகியோர் சவுண்ட் மிக்சிங் பணியையும் சவுண்டு ரெக்கார்டிங் பணியை சித்தார்த் சதாசிவம், காஸ்டியூம் டிசைனராக பூர்ணிமா ராமசாமி மற்றும் அனுவர்தன் ஆகியோர்களும் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை டிஎஸ் சுரேஷ் என்பவர் படத்தொகுப்பு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெங்களூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும், அடுத்த மாதம் இந்த படப்பிடிப்பு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன